வேலூர்: ஜூலை 25ஆம் தேதி ஈடிவி பாரத், வேலூரில்பாதாள சாக்கடைகளின் மூடி சரிவர மூடாமல் இருப்பதாகவும், இதனால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுவதாக செய்தி வெளியிட்டிருந்தது. இதன் எதிரொலியாக தற்போது மூடாமல் கிடந்த பாதாள சாக்கடையின் மூடும் பணியை வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈடிவி பாரத் வெளியிட்ட செய்தியில், வேலூர் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டம் கடந்த 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இன்னும் வரையிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும். அவ்வப்போது பாதாளச் சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை நீக்க ஆங்காங்கே இடைவெளி விடப்பட்டு இருப்பதாகவும்.
சமீபகாலமாக மாநகரப் பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டம் முறையான பராமரிப்பின்றி மக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும். குறிப்பாக, ஒரு சில இடங்களில் பராமரிப்புப் பணிக்காக திறக்கப்படும் பாதாள சாக்கடையின் மூடிகள் சரிவர மூடப்படாமல், திறந்த நிலையில் விட்டுவிடுபடுவதாகவும். இதனால், அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுவதாகவும் என்று பொதுமக்கள் தெரிவித்திதாகவும் வெளியிடப்பட்டு இருந்தது.
மேலும் இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும் போது, சாலையில் தேங்கி இருக்கும் மழை வெள்ளத்தை விட, அந்த மழைநீரில் மறைந்திருக்கும் பாதாளச் சாக்கடையின் பள்ளம் குறித்த அச்சம்தான் அதிகமாக ஏற்படுகிறது என்று தெரிவித்தனர். பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்வதற்காக அதைத் திறக்கும் ஊழியர்கள், அதனை முறையாக மூடாமலும், அதைச்சுற்றி சிமென்ட் கலவை பூசாமலும் அப்படியே விட்டு விடுகின்றனர். இதனால் அந்த இடங்களில் பள்ளங்கள் ஏற்படுகின்றன என தெரிவித்தனர்.