வேலூர்: வேலூரிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திற்கான வேட்பாளர்கள் அறிவிப்பு நிகழ்ச்சி, நிர்வாகிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் இன்று (ஜனவரி 30) நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "பாஜக ஆட்சியின் சாதனை, திட்டங்கள் குறித்துப் பேச ஒன்றும் இல்லை. அவர்கள் கொண்டுவந்த திட்டங்கள் எல்லாமே கொடும் திட்டங்கள்தான்.
நாங்கள் வேல்-ஐ கையில் எடுத்தது பண்பாட்டு மீட்சி. ஆனால், பாஜக மற்றும் திமுக ஸ்டாலின் வேல்-ஐ கையில் எடுத்திருப்பது தேர்தலுக்காகத்தான். தமிழ் இறை அனைவருக்கும் சொந்தம். இத்தனை ஆண்டுகளாக ஸ்டாலின் ஏன் வேல்-ஐ கையில் எடுக்கவில்லை. பாஜகவும் கட்சி தொடங்கி இத்தனை ஆண்டுகளாக வேல்-ஐ கையில் எடுக்கவில்லை. தற்போது எடுப்பது தேர்தலுக்காக என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
வேளாண் குடி மக்களின் கடனை ரத்துசெய்யப்பட வேண்டும் என மத்திய பட்ஜெட்டில் எதிர்பார்க்கிறோம். நாம் தமிழர் கட்சி இந்திய கட்சிகள், திராவிட கட்களுடன் கூட்டணி வைக்காது. தனித்துதான் போட்டியிடும். 7 பேர் விடுதலை என்பது 25 ஆண்டுகாலப் போராட்டத்திற்குப் பிறகு தற்போது ஆளுநர் கையெழுத்தில் இருக்கிறது.