திருப்பத்தூர் ரயில் நிலையத்திற்கு நேற்றிரவு பனஸ்வாடியிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் எர்ணாகுளம் விரைவு ரயிலில் தடைசெய்யப்பட்ட பான் மசாலா கடத்தப்படுவதாக ரயில்வே நிலைய காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் திருப்பத்தூர் ரயில் நிலையத்திற்கு வந்த, எர்ணாகுளம் விரைவு ரயிலில், ரயில்வே காவல் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் எஸ் 2 கோச்சிலிருந்த அரசால் தடைசெய்யப்பட்ட இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான 35 கிலோ பான் மசாலாபறிமுதல்செய்யப்பட்டது.