வேலூர் மாவட்ட பள்ளிகொண்டா அருகே உள்ள சுங்கச்சாவடியில் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கிருஷ்ணகிரியிலிருந்து சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த வேனை நிறுத்தி காவல் துறையினர் சோதனை செய்தனர்.
8 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பறிமுதல்: ஒருவர் கைது!
வேலூர்: பள்ளிகொண்டா அருகே சட்டவிரோதமாக கடத்தி செல்லப்பட்ட மூன்று லட்சம் ரூபாய் குட்கா பொருள்கள் காவல் துறையின பறிமுதல் செய்தனர்.
குட்கா பறிமுதல்
அப்போது வேனில், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட 3 லட்சம் ரூபாய் அளவிலான குட்கா பொருள்கள் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து வேன் ஓட்டுநர் ஸ்டீபனை கைது செய்ததது மட்டுமின்றி, குட்கா பொருள்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வேனை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:குடியாத்தம் அருகே 2 போலி மருத்துவர்கள் கைது