வேலூர் தொகுதிக்கான மக்களவைத் தேர்தல் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு வரும் 24ஆம் தேதி நடைபெறுகிறது.
வேலூரில் 24ஆம் தேதி அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை
வேலூர்: தேர்தல் பயிற்சியில் ஆசிரியர்கள் கலந்துகொள்ள வசதியாக வேலூர் மாவட்டத்தில் வரும் 24ஆம் தேதி அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர்
எனவே, ஆசிரியர்கள் இப்பயிற்சி வகுப்பில் தடையின்றி கலந்துகொள்ள ஏதுவாக 24ஆம் தேதியன்று அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்கப்பள்ளி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
விடுமுறை நாளை ஈடுசெய்ய நாளை (ஜூலை 20) வேலை நாளாக செயல்படுமென்றும், தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படுமென்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தார்.
Last Updated : Jul 19, 2019, 3:17 PM IST