வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த முதலியார் தெருவைச் சேர்ந்தவர் ஜோதீஸ்வரன். தொழிலதிபரான இவர் இரு தினங்களுக்கு முன்பு மைசூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்றார். இதனையறிந்த அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று இரவு வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 62 சவரன், 15 கிலோ வெள்ளி, 1லட்சத்து 42 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.
ஜோலார்பேட்டையில் 62 சவரன் நகை கொள்ளை - காவல்துறை விசாரணை! - looted
வேலூர்: ஜோலார்பேட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 62 சவரன் நகை மற்றும் 15 கிலோ வெள்ளி, 1லட்சத்து 42ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற அடையாளம் தெரியாத நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தங்கம், வெள்ளி உள்ளிட்டவை கொள்ளை
இந்நிலையில், இன்று அதிகாலை வீடு திரும்பிய ஜோதீஸ்வரன் 2 பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.