வேலூர்:காட்பாடி அருகே உள்ள தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாணவி சௌந்தர்யா (17). நீட் தேர்வில் மதிப்பெண் குறைவாகப் பெற்று விடுவோமோ என்ற அச்சத்தில் நேற்று (செப்.15) காலை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
மாணவியின் உடல் உடற்கூராய்வுக்குப் பிறகு மாலை 5.30 மணி அளவில் வீட்டிற்கு எடுத்து வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி நேரில் சென்று மாணவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
நீட் தேர்வில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மாணவர்கள் அனைவரும் உறுதியோடு இருக்க வேண்டும். நாம் கண்டிப்பாக சாதிக்க முடியும். இந்தத் தேர்வில் வெற்றிபெறவில்லை என்றால் அடுத்த தேர்வில் மீண்டும் எதிர்கொள்ள முடியும். இதையெல்லாம் மாணவர்கள் மனதில் கொள்ள வேண்டும்.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அரசு பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு நீட் தேர்வில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியிருந்தார். இன்று இறந்திருக்குக்கூடிய சௌந்தர்யா அரசுப் பள்ளியில் படித்து வந்த மாணவி என்பதால் கண்டிப்பாக இவருக்கு அந்த இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வாய்ப்பு இருந்திருக்கும்.