தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலையோரம் கொட்டிக்கிடந்த ரூ.14 லட்சம் மதிப்புள்ள ரூ.500 நோட்டுக்கள் - Vellore North Police Department

வேலூரில் சாலையோரத்தில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுக்கள் கொட்டிகிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ரூ.500 நோட்டுகள்- பொது மக்கள் போட்டி போட்டி எடுத்ததால் பரபரப்பு!
சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ரூ.500 நோட்டுகள்- பொது மக்கள் போட்டி போட்டி எடுத்ததால் பரபரப்பு!

By

Published : Oct 1, 2022, 9:41 PM IST

வேலூர் மாவட்டம்அருகே கொணவட்டம் சென்னை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் இன்று (அக்.1) காலை காரில் வந்த கும்பல் ஒன்று கட்டு கட்டாக ரூ.500 நோட்டுகளை கொட்டிவிட்டு சென்றனர். அதன்பின் காற்றில் பறந்த ரூபாய் நோட்டுகளை கண்ட வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நோட்டுகளை போட்டி போட்டு எடுத்துக்கொண்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த வேலூர் வடக்கு காவல் துறையினர் பணத்தை பறிமுதல் செய்தனர். அதை எடுத்துக்கொண்டவர்களிடமும் பறிமுதல் செய்யப்பட்டது.அந்த வகையில் மொத்தமாக ரூ.14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நோட்டுகள் அனைத்தும் கலர் ஜெராக்ஸ் எக்கப்பட்ட கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது. அதன்பின் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொட்டி சென்றவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க:ஒரே இரவில் 5 கிராமங்களில் 12 பேரை கடித்த பிட்புல் நாய்

ABOUT THE AUTHOR

...view details