தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நான்கு அரசு அலுவலர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு - நான்கு பேர் மீது வழக்குப்பதிவு

வேலூர்: உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேற்று(ஜன.7) நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனையைத் தொடர்ந்து இன்று(ஜன.7) நான்கு பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

fir filed
fir filed

By

Published : Jan 7, 2021, 7:33 PM IST

வேலூர் மாவட்டம், அண்ணா சாலையிலுள்ள ஏலகிரி வளாகத்திலுள்ள உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேற்று (ஜன.6) வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது புத்தாண்டுக்குப் பரிசாகப் பெறப்பட்டதாகக் கணக்கில் வராத ஒரு லட்சத்து நான்காயிரம் ரூபாயை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பான லஞ்ச ப்புகாரில் தொடர்புடைய மேலும் நான்கு பேரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர்.

லஞ்சம் பெற்றதாக உதவி இயக்குனர் பரந்தாமன், லஞ்சம் கொடுத்ததாகப் பள்ளிகொண்டா பேரூராட்சி செயல் அலுவலர் மலர்மாறன், லஞ்சப் பணத்தை வசூல் செய்து கொடுத்ததாக உள்ளாட்சி நிதி தணிக்கைத்துறை கண்காணிப்பாளர் மாரிமுத்து, பள்ளி கொண்டா பேருராட்சிப் பதிவு எழுத்தர் முரளி ஆகிய நான்கு பேர் மீது வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர், ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details