வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலுள்ள 13 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வெளியிட்டார். இந்தப் பட்டியல்களை அதிமுக, திமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சிப் பொறுப்பாளர்கள் பெற்றுக்கொண்டனர்.
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு - இறுதிவாக்காளர் பட்டியல் வெளியீடு
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் வெளியிட்டார்.
மூன்று மாவட்டங்களில் உள்ள வேலூர், அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் , ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 13 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 15 லட்சத்து 60 ஆயிரத்து 297 ஆண் வாக்காளர்கள், 16 லட்சத்து 28 ஆயிரத்து 512 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தனவர் 208 பேர் என மொத்தம் 31 லட்சத்து 89 ஆயிரத்து 017 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:புதுவை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு