வேலூர் மாவட்டம் சோளிங்கா் அடுத்துள்ள கீழ்வீராணம் பகுதியைச் சோ்ந்தவர் ஆறுமுகம் (70). விவசாயியான இவர், இன்று வழக்கம்போல் தனது நிலத்துக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக சென்றார். அப்போது, கீழே அறுந்து கிடந்த மின் கம்பியை எதிர்பாராத விதமாக இவர் மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மின் கம்பியை மிதித்ததில் விவசாயி பலி - died
வேலூர்: சோளிங்கர் அருகே அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியை மிதித்ததில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மின்சார கம்பியை மிதித்ததில் விவசாயி பலி
அவருடன் சென்ற வளர்ப்பு நாய், மேய்ச்சலுக்கு சென்ற பசு மாடு ஆகியவையும் சம்பவ இடத்திலேயே பலியானது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவ்வழியாக சென்ற பொதுமக்கள், சடலத்தைக் கண்டு பாணாவரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், சடலத்தைப் பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.