தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பத்தூரில் பறக்கும் படையினர் அதிரடி - ரூ. 3,50,000 பறிமுதல்! - amount

வேலூர்: திருப்பத்தூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

3 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல்

By

Published : Apr 30, 2019, 2:34 PM IST

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பசிலிக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் கட்டுமான பணியின் ஒப்பந்தாரராக உள்ளார். இந்நிலையில், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக திருப்பத்தூரிலிருந்து பெங்களூருக்கு தனது காரில் சென்றுகொண்டிருந்த போது திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படையினர் காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

பறக்கும் படை சோதனை

அப்போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, அத்தொகையை திருப்பத்தூர் தாசில்தார் அனந்தகிருஷ்ணனிடம் அலுவலர்கள் ஒப்படைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details