வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்தை ஆதரித்து ஆம்பூர் பஜார் பகுதியில் வாக்கு சேகரிப்பில் திமுக தலைவர் ஸ்டாலின் ஈடுபட்டிருந்தார். அப்போது ஸ்டாலின் அங்கிருந்த தனியாருக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் இஸ்லாமிய நிர்வாகிகளுடன் சந்திப்பில் ஈடுப்பட்டார்.
திருமணம் முடிந்தது... மண்டபத்தைப் பூட்டிய தேர்தல் அலுவலர்!
வேலூர்: திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற திருமண மண்டபத்திற்கு திருமணத்திற்காக வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்ததையடுத்து அம்மண்டபத்திற்கு அலுவலர்கள் மீண்டும் பூட்டு போட்டனர்.
இதனையடுத்து தேர்தல் விதிமுறையை மீறியதாக ஸ்டாலின் மீதும், திருமண மண்டப உரிமையாளர், வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகியோர் மீதும் தேர்தல் விதிமுறையை மீறியதாக வழக்குகள் தொடரப்பட்டன. இதனால் அத்திருமண மண்டபத்தை வட்டாச்சியர் தலைமையிலான தேர்தல் அலுவலர்கள் சீல் வைத்தனர். ஆனால் அந்த மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்ததால், அதற்கு மட்டும் அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர்.
அதன்பேரில், மண்டபத்தை திறக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்திருந்தார். இந்நிலையில், திருமணம் நிறைவடைந்ததையடுத்து, அம்மண்டபத்திற்கு தேர்தல் அலுவலர்கள் மீண்டும் பூட்டு போட்டனர்.