தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூர் மக்களவைத் தேர்தல்: ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்! - ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

வேலூர்: மக்களவைத் தேர்தலையொட்டி திருமண மண்டபம், தங்கும் விடுதி, அச்சக உரிமையாளர்கள், டிஜிட்டல் பேனர் உரிமையாளர்கள் ஆகியோருடன் அம்மாவட்ட மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் ஆலோசனை நடத்தினார்.

vellore

By

Published : Jul 8, 2019, 9:20 PM IST

வேலூர் தொகுதிக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் பணிகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபம், தங்கும் விடுதி, அச்சக உரிமையாளர்கள், டிஜிட்டல் பேனர் உரிமையாளர்கள் ஆகியோருடன் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் ஆலோசனை நடத்தினர்.

ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்!

கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், "தேர்தல் நடத்தை விதிமுறைகள் வேலூர் மாவட்டத்தில் அமலுக்கு வந்துள்ளன. எனவே தேர்தல் சம்பந்தமான நோட்டீஸ், சுவரொட்டிகள், விளம்பர பேனர்கள், செய்தி அறிக்கைகள் ஆகியவை அச்சடிக்கப்பட்டால் அச்சகத்தின் உரிமையாளர், வெளியிடுபவர் ஆகியோரின் முகவரி, எத்தனை எண்ணிக்கையில் நகல் அச்சடிக்கப்பட்டுள்ளது என்ற முழு விவரமும் தெரியும் வகையில் அச்சடிக்கப்பட வேண்டும்.

திருமண மண்டபங்களில் வெளியூரிலிருந்து வரும் நபர்களை தங்க வைக்க அனுமதிக்கக் கூடாது. மண்டபங்களில் அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்தினால் அது குறித்து முன்கூட்டியே தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சுப நிகழ்ச்சி என்ற பெயரில் திருமண மண்டபங்களில் மக்களை கூட்டி பரிசுப்பொருட்கள், புடவைகள், பணம் வழங்கினால் அது குறித்த தகவலை உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

ABOUT THE AUTHOR

...view details