தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நண்பர்கள் பணத்திற்கு விலை போய் விட்டார்கள்' - துரைமுருகன் - etv bharat

சட்டப்பேரவை தேர்தலில் நண்பர்கள் சிலர் பணத்திற்கு விலை போய் விட்டதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

நண்பர்கள் பணத்திற்கு விலை
நண்பர்கள் பணத்திற்கு விலை

By

Published : Jul 27, 2021, 1:37 PM IST

வேலூர்: சித்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் காட்பாடி ஒன்றிய திமுக கிழக்கு கழக உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு திமுக பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்கினார்.

தபால் வாக்கு மூலம் வெற்றி

இக்கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது, "இந்த சட்டப்பேரவை தேர்தலில் காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட நான் தபால் வாக்கு மூலமாக மட்டுமே வெற்றி பெற்றேன். என்னுடைய நிலத்தில் விளைச்சலை எடுக்க முடியவில்லை. இப்பிரச்னை தமிழ்நாட்டின் பல தொகுதிகளில் உள்ளன. அவற்றை பொதுச்செயலாளர் என்ற முறையில் கவனித்து வருகிறேன்.

தொலைபேசி பதிவு

கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது என்னுடன் இருந்த நண்பர்கள் பலர் பணத்திற்கு விலை போய் விட்டார்கள். அவர்களின் தொலைபேசி பதிவு என்னிடம் உள்ளது.

நண்பர்கள் பணத்திற்கு விலை

ஓய்வு பெற மாட்டேன்

இதன் காரணமாக மிகுந்த மன வருத்தத்தில் உள்ளேன். என்ன குறை வைத்தேன் உங்களுக்கு, வெக்கமாக உள்ளது. நான் இந்த தேர்தலுடன் ஓய்வு பெறலாம் என்று நினைத்தேன். ஆனால் ஓய்வு பெற மாட்டேன். இன்னும் என் கட்சிக்காக அயராது பாடுபடுவேன்" என்றார்.

இதையும் படிங்க:மக்கள் குறைதீர்க்கும் அறையில் சங்கர் ஜிவால் திடீர் ஆய்வு

ABOUT THE AUTHOR

...view details