வேலூர்: வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், 'அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் முதற்கட்டப் பணிகள் முடித்தபிறகு தான் அடுத்த கட்டப்பணிகள் துவங்கும். அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை கடந்த ஆட்சியில் அவசரப்பட்டு துவக்கிவிட்டு முடிக்காமல் சென்று விட்டனர். இத்திட்டத்தை பொறுத்தவரை கடந்த ஆட்சியாளர்கள் செய்ததைப் போலவே தற்போதும் செய்ய முடியாது.
அந்த திட்டத்தைப் பொறுத்தவரை, ஒரு ஏரியில் இருந்து மற்றொரு ஏரிக்கு தண்ணீர் குழாய் மூலம் தான் எடுத்துச் செல்ல வேண்டும். மேலும் பல இடங்களில் மின்சாரத்தைப் பயன்படுத்தியே தண்ணீர் எடுக்க வேண்டும். தண்ணீர் செல்லும் இடமெல்லாம் தனியார் நிலங்களாக உள்ளன. ஆகவே, அவைகளை எடுக்க வேண்டிய தொடர் பணிகள் உள்ளன.