வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த குகைய நல்லூரில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்துவருகின்றனர். தற்போது கோடைகாலம் என்பதால் பாலாற்றில் தண்ணீர் இல்லை. அதன்காரணமாக அங்குள்ளவர்களின் குடிநீர் தேவைக்காக மாநகராட்சி, அருகிலுள்ள ஏரியில் ஆழ்துளை மூலம் குடிநீர் வசதியை ஏற்படுத்திக்கொடுத்தது. அப்படி வரும் குடிநீரில் துர்நாற்றமும், மீன்களும் வருவதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
குடிநீரில் துர்நாற்றமும் மீன்களும்: காட்பாடியில் மக்கள் மறியல் - குடிநீரில் துர்நாற்றம், மீன்கள்
வேலூர்: காட்பாடி அருகே குடிநீரில் துர்நாற்றமும் மீன்களும் வருவதாக அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
-road-protest-in-vellore
அதனால் அவர்கள் திருவலம் - பொன்னை சாலையில் காலிக்குடங்களுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீீருக்கு ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கைவைத்தனர். அதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் பானுமதி அங்கு விரைந்து, முறையான குடிநீர் வழங்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க:சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்