சென்னையில் இந்த ஆண்டு கடுமையான வறட்சி காரணமாக குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதன் காரணமாக தமிழ்நாடு அரசு சென்னைக்கு குடிநீர் கொண்டுவருவதற்கு 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.
இதன் அடிப்படையில் ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு குடிநீர் எடுத்துச்செல்ல திட்டமிட்டனர். இதற்காக ஜோலார்பேட்டை மேட்டுச்சக்கர குப்பம் பகுதியில் தரைத்தளத் தொட்டி அமைக்கப்பட்டு அதிலிருந்து ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு 50 வேகன்கள் கொண்டுவரப்பட்டு கடந்த 12ஆம் தேதி ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர் எடுத்துச் செல்லப்பட்டது.
வேகன்களில் குடிநீர் நிரப்பும் பணி இதுவரை ஒரு ரயில் மூலமாகவே சென்னைக்கு சுமார் 2.75 கோடி லிட்டர் குடிநீர் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. எனவே தற்போது இரண்டாவது ரயிலும் நேற்று இரவு ராஜஸ்தானிலிருந்து ஜோலார்பேட்டை வந்தடைந்தது. தற்போது இந்த ரயிலிலும் 50 வேகன்களில் 25 லட்சம் லிட்டர் குடிநீர் எடுத்துச்செல்கிறது.
மேலும், இந்த இரண்டு ரயில்கள் மூலம் சென்னைக்கு 100 வேகன்களில் நாளொன்றுக்கு 50 லட்சம் லிட்டர் குடிநீர் எடுத்துச்செல்ல அலுவலர்கள் திட்டமிட்டிருக்கின்றனர்.
ஜோலார்பேட்டை ரயில் நிலையம் மேலும் சில வேகன்களின் குழாய்கள் பழுதடைந்திருப்பதால் குடிநீர் வீணாகிறது எனவும் இதற்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.