வேலூர்: ஆந்திர மாநிலத்தில் உடல் வலிமை பெறுவதற்காகப் பலரும் கழுதை கறியை உண்டு வருகின்றனர். இதற்கு அறிவியல் பூர்வமாக எவ்வித ஆதாரங்களும் இல்லாத நிலையில், கழுதைகளை இறைச்சிக்காகக் கொல்வது சட்டப்படி குற்றம் என்று அம்மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் போதிய கழுதைகள் இல்லாததால் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ராஜஸ்தானில் போன்ற மாநிலங்களிலிருந்து கழுதைகள் இறைச்சிக்காகக் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்தநிலையில், நேற்று (டிச.7) வேலூர் அண்ணாசாலையில் தெற்கு காவல்துறையினர் வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர். அப்போது, மினி லாரி ஒன்றில் கழுதைகளை ஏற்றிக் கொண்டு ஆந்திராவைச் சேர்ந்த 5 பேர் வந்தனர்.
ஆந்திராவிற்கு கழுதை கடத்தல் காவல்துறையினரைக் கண்டதும் அவர்கள் மினி லாரியை நிறுத்தாமல் சென்றுள்ளனர். இதனையடுத்து, வாகனத்தை விரட்டி சென்ற காவல்துறையினர் மக்கான் சிக்னல் அருகே லாரியை மடக்கினர். அப்போது, அதில் வந்த 4 பேர் தப்பி ஓடிய நிலையில், லாரி ஓட்டுநரான சீனிவாசலால்(50) என்பவரை மட்டும் மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில், அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் இருந்து கழுதைகளை இறைச்சிக்காக நெல்லூருக்கு கொண்டு செல்வது தெரியவந்தது. இதனையடுத்து வாகனத்துடன் 6 கழுதைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஆந்திராவைச் சேர்ந்த ஓட்டுநரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தப்பி ஓடிய 4 பேரைத் தேடி வருகின்றனர்.
ஆந்திராவிற்கு கழுதை கடத்தல் இதையும் படிங்க:'இங்க என்ன ஜெசி ஜெசின்னு சொல்லுதா?' காணாமல் போன ஜெசி பூனைக்காக ஒட்டப்பட்ட சுவரொட்டி