தமிழ்நாடு

tamil nadu

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு அப்போலோவில் சிகிச்சை

By

Published : Jan 4, 2021, 8:15 PM IST

Updated : Jan 4, 2021, 10:56 PM IST

வேலூர்: உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வீடு திரும்பினார்.

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு அப்போலோவில் சிகிச்சை
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு அப்போலோவில் சிகிச்சை

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் திமுகவின் மக்கள் கிராம சபை கூட்டத்தில் திமுகவின் முன்னணி தலைவர்கள் பக்கேற்று பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ராணிப்பேட்டையில் உள்ள மருதம்பாக்கம், பல்லேரி, கொண்டகுப்பம் ஆகிய பகுதிகளில் இன்று (ஜன. 04) பங்கேற்று உரையாற்றி வந்தார்.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு அப்போலோவில் சிகிச்சை

இந்நிலையில் இந்த நிகழச்சியை முடித்துவிட்டு சென்னை வீட்டிற்கு செல்லும் வழியில் துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனே அருகில் உள்ள ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் அப்போலோ கே.எச். மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் மதியம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு ரத்தம், சிறுநீர், ரத்த அழுத்தம் ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் அவரது உடல்நிலை சீராக இருந்தது என்றும் மருத்துவமனையிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

துரைமுருகன் சிகிச்சைக்கு பிறகு வீட்டிற்கு திரும்பினார்

இதனையடுத்து, தகவல் அறிந்து அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் நந்தகுமார், வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன், ராணிப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் காந்தி ஆகியோர் நேரில் வந்து உடல்நிலை குறித்து விசாரித்து சென்றனர்.

மருத்துவமனையில் சுமார் 5 மணி நேர ஓய்விற்கு பிறகு மாலை 6.00 மணி அளவில் மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து நேராக சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார்.

இதையும் படிங்க:பொங்கல் பரிசுத் தொகைக்கான டோக்கனில் அதிமுக தலைவர்கள் படம், சின்னம் இடம்பெறாது - தமிழ்நாடு அரசு விளக்கம்!

Last Updated : Jan 4, 2021, 10:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details