தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தண்ணீர் சிக்கல்... அரசியலாக்க முயலும் துரைமுருகன்!' - water scarcity

நெல்லை: சொந்த மாநிலத்தில் உள்ள தண்ணீரை தர மறுப்பதின் மூலம் திமுகவின் உள் நோக்கம் என்ன என்பது தெரிகிறது. துரைமுருகன் தேவையில்லாமல் தண்ணீர் பிரச்னையை அரசியலாக்க முயல்கிறார் என்று கடம்பூர் ராஜு குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடம்பூர் ராஜூ

By

Published : Jun 23, 2019, 9:56 AM IST

Updated : Jun 23, 2019, 4:24 PM IST

நெல்லையில் அரசு பொருட்காட்சி தொடக்க விழா நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜு, ஆதிதிராவிடர்; பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் ராஜலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு திறந்துவைத்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜு, "சொந்த மாவட்டமான வேலூர் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல தடுக்கும்விதமாக துரைமுருகன் தேவையில்லாமல் தண்ணீர் பிரச்னையை அரசியலாக்க முயல்கிறார்" எனக் குற்றம்சாட்டினார்.

உள்ளூர் பிரமுகர்களை தண்ணீர் விடக்கூடாது என மிரட்டுவது ஒரு புறமிருக்க, காவிரி, முல்லைப்பெரியாறு போன்ற பிரச்னைகள் போன்றவற்றை திமுகதான் செய்தது எனவும் அவர் பகிரங்கமாக புகார் தெரிவித்தார்.

Last Updated : Jun 23, 2019, 4:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details