வேலூர்: காட்பாடி பகுதியைச் சேர்ந்தவர் தயாநந்தகிரி. இவர் அப்பகுதிகளில் பிச்சை எடுத்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் பிச்சை எடுத்து வரும் கேரள மாநிலத்தை சேர்ந்த பாபுராஜ், அவருடைய நண்பர் தனிப்பல் என்பவருக்கும் மதுபோதையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. இதை அப்பகுதியில் முககவசம் விற்பனை செய்து கொண்டிருந்து விக்ரம் சிங் என்பவர் இரு தரப்பையும் சமாதானம் செய்து வைத்தார்.
அப்போது பாபுராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தயாநந்தகிரியின் மார்பு பகுதியிலும், நெற்றியிலும் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த தயாநந்தகிரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து விக்ரம் சிங் காட்பாடி காவல்துறையினருக்கு புகார் அளித்தார்.