வேலூர் மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 12 கோடி நிதி ஒதுக்கீட்டின்கீழ் தற்போது வரை நகர் முழுவதும் 937 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனை கண்காணிக்க வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இது எஸ்.பி. அலுவலகத்தில் இருந்தும் கண்காணிக்கப்படும்.
இதன் ஒரு பகுதியாக ரூ.56 லட்சம் மதிப்பில் தமிழ்நாட்டில் முதல்முறையாக அதி நவீன தொழில் நுட்பத்துடனும் செயற்கைக்கோள் இணைப்புடனும் கூடிய சிசிடிவி மொபைல் கட்டுப்பாட்டு வாகனத்தை காவல்துறை வாங்கியுள்ளது. இந்த வாகனத்தில் ஜாமர் கருவி, ஆறு அதிநவீன சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஆறு திரைகள் ஆகியவை உள்ளன.
இதில் உள்ள இரண்டு கேமராக்கள் மூலம் இரண்டு கிலோ மீட்டர் வரை தெளிவாக கண்காணிக்க முடியும். இது தற்போது மாவட்ட காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், மேயர் சுஜாதா, ஆணையர் அசோக்குமார் ஆகியோர் வாகனத்தை தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபுவிடம் வழங்கினர்.
இதனை பெற்றுக்கொண்ட டிஜிபி பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டிஜிபி சைலேந்திரபாபு, “தற்போது தொடங்கியுள்ள மொபைல் சிசிடிவி கேமரா வாகனம் 56 லட்சம் ரூபாய் மதிப்பிலானது. இதனை காவல் துறைக்கு வழங்கிய மாநகராட்சிக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.