தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பயணிகள் விமானங்களை தயாரிக்கும் தொழில்நுட்ப பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டும் - சந்திராயன் 3 இயக்குநர் மோகன குமார்! - Chandrayaan 3 Project Director Mohana Kumar

VIT University: இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் பயணிகள் விமானங்களை தயாரிக்கும் தொழில்நுட்ப பாடத்திட்டங்களை உருவாக்கப்பட வேண்டும் என சந்திராயன் 3 திட்ட இயக்குனர் மோகன குமார் தெரிவித்துள்ளார்.

VIT University
வி.ஐ.டி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 2, 2023, 11:53 AM IST

ISRO Chandrayaan 3 Project Director Mohana Kumar

வேலூர்வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் சந்திராயன் 3 விண்கலம் குறித்த மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சந்திராயன் 3 திட்ட இயக்குநர் மோகன குமார் கலந்துகொண்டு மாணவர்களுடன் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது; "சந்திராயன் 3 பணியின் வரலாற்று வெற்றியை ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடி வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் சந்திராயன் 3ல் பயன்படுத்தப்பட்டது. இதன் காரணமாகத்தான் அது செலவும் குறைவாக உள்ளது. சந்திரன் 3 தயாரிக்க அனைத்து தொழில்நுட்பங்களும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டது.

குறிப்பாக சந்திரன் 3 மிஷின் தயாரிப்பில் முக்கிய பங்கு வகித்தவர்கள் அதற்கான உதிரி பாகங்கள் தயாரித்தவர்கள் தான். காரணம் சந்திராயன் 3க்கு தேவையான உதிரி பாகங்களை குறிப்பிட்ட நேரத்தில் தயார் செய்து வழங்கியதால் தான் சந்திராயன் 3 சரியான நேரத்தில் வெற்றிகரமாக இயக்கப்பட்டது.

தற்போது இந்தியாவில் பயணிகள் விமானங்கள் தயாரிக்க போதிய ஆராய்ச்சிகள் இல்லை. அதன் காரணமாகத்தான் அதற்கான மூலப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து வாங்க வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவின் தேர்தல் வெற்றி செல்லாது - கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவு!

ரயில் மற்றும் வாகன போக்குவரத்து தவிர விமான விபத்துகளின் சதவீதம் குறைவாகவே உள்ளது. அதனால் தான் பயணிகள் விமானம் உள்நாட்டிலேயே தயாரிக்க, தேவையான பாடத்திட்டங்களை பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கொண்டு வர வேண்டும். பல்வேறு துறைகள் இதில் இணைந்திருப்பதால் ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மாணவர்களும் விமான உதிரி பாகங்கள் தயாரிப்பில் அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும்.

சந்திராயன் 3 ஹார்பிட்டர் லேண்ட், ரோபோட் என மூன்று பகுதிகள் உள்ளது. இதில் லேண்டர், ரோவர் ஆகியவை பேட்டரியால் இயங்கக் கூடியவை. அந்த பேட்டரி 14 நாட்கள் மட்டுமே இயங்கக் கூடியது. சோலார் எனர்ஜி மூலம் பேட்டரி இயங்குவதால் 14 நாட்கள் மட்டுமே நிலவின் தென் பகுதியில் சூரிய ஒளி காணப்படும்.

தற்போதுள்ள தொழில்நுட்பத்தில் 14 நாட்கள் மட்டுமே இயங்கக்கூடிய பேட்டரி தயாரிக்கப்பட்டுள்ளது அதற்கான தொழில்நுட்ப மட்டுமே தற்போது இஸ்ரோவில் உள்ளது. விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் தற்போது இல்லை அதற்கான முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

முதலில் சேட்டிலைட் எந்த எடை அளவு செல்கிறது என்பதை ஆராய்ச்சி செய்து அந்த எடை அளவிற்கு ஆராய்ச்சியாளர்கள் அனுப்பலாமா என்று ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்படும் பொருட்களுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள், அதிக அளவில் பயன்படுத்த மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக" அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:Metro Rail Phase 2: கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வழித்தடத்தில் தொடங்கியது சுரங்கப் பாதை பணி!

ABOUT THE AUTHOR

...view details