தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தாமரையை வீழ்த்தும் சக்தியாக முடியாது; திருமாவளவன் பாஜகவில் இணையும் நாள் வரும்' - சி.பி. ராதாகிருஷ்ணன்

வேலூர்: திருமாவளவன் பாஜகவில் இணையும் நாள் தமிழ்நாட்டில் வருமே தவிர அக்கட்சியைத் தமிழ் மண்ணில் வீழ்த்தும் சக்தியாக உருவாக முடியாது என சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

cp radhakrishnan speech in vel yatra
cp radhakrishnan speech in vel yatra

By

Published : Nov 9, 2020, 10:39 PM IST

Updated : Nov 9, 2020, 10:54 PM IST

பாஜகவின் வேல் யாத்திரைப் பொதுக்கூட்டம் வேலூர் மண்டித்தெருவில் இன்று (நவ.9) நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், ”விசிக தலைவர் திருமாவளவன் பெரியார் பெயரைச் சொல்லி சாதி ஒழிப்பு அரசியல் செய்வதாகக் கூறிக் கொண்டு சாதிய அரசியலைச் செய்து வருகிறார். அந்த அடிப்படைவாதத்தை ஒழிக்கும் செயலைச் செய்யும் தலைவராக எல். முருகன் வளர்ந்துவருகிறார். திருமாவளவன் பாஜகவில் இணையும் நாள் தான் தமிழ்நாட்டில் வருமே தவிர, தாமரையைத் தமிழ் மண்ணில் வீழ்த்தும் சக்தி இன்றைக்கும், என்றைக்கும் உருவாக முடியாது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாடு அரசு வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கவில்லை. கரோனா பரவிவிடக் கூடாது என்பதற்காகத்தான் அனுமதியளிக்கவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறுகிறார். அதிமுகவினர் ஒவ்வொரு மாவட்டமாக சென்று கூட்டம் நடத்துகிறார்கள். அங்கெல்லாம் கரோனா பரவாதா? தமிழ்நாட்டு அரசியலில் பரவியிருக்குற கரோனாக்களை அகற்றுவதுதான் எங்கள் ஒரே லட்சியம்” என்று கூறினார்.

சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு

இதையடுத்து அனுமதியின்றி நடைபெற்ற வேல் யாத்திரை பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட சி.பி. ராதாகிருஷ்ணன் உட்பட சுமார் 250க்கும் மேற்பட்ட பாஜகவினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க:மனுஸ்மிருதி: திருமாவளவன் மீதான வழக்கு தள்ளுபடி - உயர் நீதிமன்றம் உத்தரவு

Last Updated : Nov 9, 2020, 10:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details