வேலூர் மாவட்டத்தில் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதுவரை அரசு, தனியார் மருத்துவர்கள், செவிலியர், காவலர்கள், பொதுமக்கள் என 122 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தனர்.
இந்நிலையில் நேற்று 3, 7 வயதுடைய இரு சிறுவர்கள் உள்பட 6 பேருக்கு கரோனா தீநுண்மி பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி வேலூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது.