தமிழ்நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக ஜூலை 13ஆம் தேதி ஒரே நாளில் 4 ஆயிரத்து 328 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம், பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 42 ஆயிரத்து 798ஆக அதிகரித்துள்ளது.
வேலூரில் மூவாயிரத்தை தாண்டிய கரோனா - பீதியில் மக்கள்! - தமிழ்நாடு கரோனா செய்திகள்
வேலூர்: ஒரே நாளில் 209 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், வேலூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மூவாயிரத்தை கடந்துள்ளது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று மட்டும் புதியதாக 209 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,131 அதிகரித்துள்ளது.
மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 1,293 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளதாகவும், மாவட்டத்தில் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா தொற்றால் வேலூர் மாவட்ட மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.