தேர்தல் நாளன்று வேலூர் மாவட்டத்தில் உள்ள 1783 வாக்குச் சாவடி மையங்களில் 8560 அலுவலர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் அன்றைய தினம் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த முதல்நிலை பயிற்சி வகுப்பு வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இன்று (மார்ச். 21) நடைபெற்றது.
இதில் வேலூர் சாய்நாதபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சண்முகசுந்தரம் கலந்துகொண்டு அறிவுரைகளை வழங்கினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ’’கரோனா பெருந்தொற்று காலம் என்பதால் கவனமாக பணியாற்ற வேண்டும். அதற்காக உரிய உபகரணங்கள் தங்களுக்கு வழங்கப்படும். அதேபோல், வேலூரில் வெப்பம் அதிகம் இருக்கக்கூடும் என்பதால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் அனைத்து வாக்குப்பதிவு மையத்திலும் நிழற்குடைகள், தண்ணீர் வசதி உள்ளிட்டவற்றை செய்ய வேண்டும்’’ என்றும் அறிவுறுத்தினார்.
இதையடுத்து, இதுவரை கரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு பயிற்சி மையத்திலேயே பரிசோதனை செய்து கரோனா தடுப்பூசி போடப்பட்டது என்பதும் குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: புதுமுக நாயகி ஸ்ருதி நாயரின் லேட்டஸ்ட் கிளிக்!