வேலூர் அம்முண்டியில் உள்ள மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில் புதிதாக கட்டப்பட்ட விவசாயிகள் பயிற்சி மையம், கூட்டுறவு பெட்ரோல் நிலையத்தை அமைச்சர் கே.சி. வீரமணி ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.
30ஆம் தேதிக்குள் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை - கே.சி. வீரமணி - சர்க்கரை ஆலை
வேலூர்: கூட்டுறவு ஆலைகளில் இருந்து கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை வரும் 30ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என்று, அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.
KC.Veeramani,cooperativepetrol
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஏழை மக்களுக்கு தரமான, நியாயமான அளவில் பெட்ரோல் கிடைக்க வேண்டும் எனபதற்காகவே கூட்டுறவுத்துறை மூலம் இந்த பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை மக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.
மேலும், வேலூர் மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இருக்கக்கூடிய கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகை வரும் 30ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.