வேலுார் மாவட்டம் காட்பாடியில் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வியல் கல்லுாரி இயங்கிவருகிறது. இந்த கல்லூரியில் சுமார் இருநுாறுக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்றும், மாணவ - மாணவிகளுக்கு விடுதி வசதிகள் எதுவும் இல்லை எனவும், விடுதி கட்டித் தரக் கோரியும் முதலாம் ஆண்டு பயிலும் கல்லூரி மாணவ - மாணவிகள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று கல்லுாரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுனர்.
அரசு கல்வியில் கல்லுாரி மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்! - college student agitation
வேலுார்: காட்பாடியில் உள்ள அரசு கல்வியல் கல்லுாரியில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும், விடுதி கட்டித்தரக் கோரியும் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
college-students-agitation
மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பகுதிகளில் இருந்து இங்கு இருக்கக்கூடிய கல்லூரிக்கு கல்வி பயில வருவதாகவும், ஆனால், கல்லூரியில் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல், தங்குவதற்கு விடுதி வசதி கூட இல்லாமல் தாங்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருவதாகவும் மாணவ மாணவிகள் குற்றம்சாட்டுகின்றனர்.