தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூரில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு - வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை ஆட்சியர் சண்முக சுந்தரம் வெளியிட்டார்.

vellore
vellore

By

Published : Oct 16, 2020, 5:53 PM IST

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கில் 2021ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வேலூர், காட்பாடி, குடியாத்தம், கே.வி. குப்பம், அணைக்கட்டு உள்ளிட்ட ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான ஆயிரத்து 301 வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியலை ஆட்சியர் சண்முக சுந்தரம் வெளியிட்டார். இந்தக் கூட்டத்தில் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சண்முக சுந்தரம், "வேலூரில் மொத்தம் ஆயிரத்து 300 வாக்குச்சாவடிகள் இருந்தன. அணைக்கட்டு தொகுதியில் குருமலை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஐந்து கிலோமீட்டர் தூரம் சென்று வாக்களிக்க வேண்டிய சூழல் உள்ளது.

மலை கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, 270 பேருக்கு புதிதாக ஒரு வாக்குச்சாவடி உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, மொத்தம் ஆயிரத்து 301 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.

வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு

வேலூர் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி நிலவரப்படி, பெண் வாக்காளர்கள் 6 லட்சத்து 36 ஆயிரத்து 926 பேரும், ஆண் வாக்காளர்கள் 6 லட்சத்து 2 ஆயிரத்து 412 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 115 பேர் என மொத்தம் 12 லட்சத்து 39 ஆயிரத்து 453 பேர் உள்ளனர்" என்றார்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா ஆளுநர் ஆட்சியா? ராமதாஸ் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details