வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதிக்குள்பட்ட 38 ஊராட்சிகளில் கரோனா காலகட்டத்தில் குடிநீர் உள்பட அத்தியாவசிய பணிகள் எதுவும் செய்யப்படவில்லை என்றும், இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் கூறி நேற்று (ஜூன் 8) காலை அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நந்தகுமார், ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் வில்வநாதன் ஆகியோர் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
144 தடைமீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக இருவரும் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் போராட்டம் எதிரொலியாக அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள்பட்ட 38 ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் தொடர்பாக ஏழு பக்க அறிக்கையை ஆட்சியர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ளார்.
அதில், "2016-17ஆம் ஆண்டுமுதல் 2019-2020ஆம் ஆண்டு முடிய பல்வேறு திட்டங்களின்கீழ் குடிநீர், அத்தியாவசியத்திற்கென 6,462 பணிகள் 86.82 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செய்துமுடிக்கப்பட்டுள்ளது.