தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிளஸ் 2 பொதுத்தேர்வு: வேலூரில் தேர்வு மையத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு - vellore district news

வேலூர்: பிளஸ் 2 பொதுத்தேர்வை தேர்வு மையத்திற்கு நேரில் சென்று வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுசெய்தார்.

பள்ளியில் மாணவர்களை கண்காணித்த ஆட்சியர்
பள்ளியில் மாணவர்களை கண்காணித்த ஆட்சியர்

By

Published : Mar 3, 2020, 9:18 AM IST

பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. வேலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை 14 ஆயிரத்து 428 மாணவர்கள் எழுதினார்கள்.

இதற்காக மாவட்டம் முழுவதும் 61 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வில் முறைகேடுகளைக் கண்காணிப்பதற்காக மாவட்டம் முழுவதும் 80 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பள்ளியில் மாணவர்களைக் கண்காணித்த ஆட்சியர்

வேலூர் ஈவேரா நாகம்மை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பிளஸ் டூ பொதுத்தேர்வை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அப்போது மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்துகள் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பொதுத்தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டால் கடுமையான தண்டனை: தமிழ்நாடு தேர்வுத்துறை எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details