தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்..தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி பிரார்த்தனை - விண்ணேற்பு அன்னை ஆலயம்

Christmas Celebration: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, வேலூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை வெகு விமர்சையாக நடைபெற்றது.

Christmas festival Celebration in Vellore
கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 25, 2023, 9:38 AM IST

தேவாலயங்களில் களைக்கட்டிய கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்..

வேலூர்:இயேசுநாதரின் பிறப்பு விழாவையொட்டி, வேலூரில் விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. விடிய விடிய நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இயேசு கிறிஸ்து பிறந்த நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையாக, உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் இன்று (டிச.25) கொண்டாடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில் இதனை முன்னிட்டு சிறப்பு ஜெபவழிபாடு, கூட்டுப் பிரார்த்தனை ஆகியவை நடைபெற்று வருகிறது. இந்நாளானது கிறிஸ்துவர்கள், கிறிஸ்து பிறப்பை மிகவும் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

இயேசுவின் பிறப்பை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆண்டுதோறும் உலங்கெங்கும் உள்ள மக்களால், இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாள் கிறிஸ்துமஸ் தின விழாவாக உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்தவகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, வேலூரில் உள்ள விண்ணேற்பு அன்னை தேவாலயத்தில், நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு திருப்பலி மற்றும் கூட்டுப் பிரார்த்தனை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் இயேசு கிறிஸ்து குழந்தையாக பிறந்ததை வெளிப்படுத்தும் விதமாக குழந்தை இயேசு சொரூபத்தை எடுத்துக்காட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, தேவாலயங்கள் முழுவதுமாக முதல் நால் இரவிலிருந்தே வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தன. மேலும் தேவாலயங்களில், அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் குடில்களும் அமைக்கப்பட்டுள்ளன. அவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்தன. இதனைக் காண்பதற்காக ஏராளமான மக்கள் தங்களது குடும்பத்துடன் வருகை தந்து சிறப்பு திருப்பலியில் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துகள் சொல்லி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அப்போது கிறிஸ்துமஸ் பண்டிகையில் பக்கேற்றவர்களில் ஒருவர் கூறுகையில், “நான் இந்த தேவாலயத்திற்கு கிறிஸ்துமஸ் நாளில் முதல் முறையாக வருகிறேன். தேவாலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இயேசு பகவானை கிறிஸ்துமஸ் குடிலில் வைத்து சிறப்பாக பிரார்த்தனை நடைபெற்றது. உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுங்கள்” என்று மகிழ்ச்சிப் பொங்க பேசினார்.

இதேபோல், வேலூர் அண்ணாசாலையில் உள்ள தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ) தேவாலயத்திலும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும், காட்பாடி, குடியாத்தம், பள்ளிகொண்டா, பேரணாம்பட்டு, அணைக்கட்டு உள்ளிட்ட பல இடங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை தேவாலயங்களில் உற்சாகமாக கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இதையும் படிங்க:கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை..ஏராளமானோர் பங்கேற்பு

ABOUT THE AUTHOR

...view details