தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 4, 2021, 3:39 AM IST

ETV Bharat / state

9 நாட்கள் தேடுதல் வேட்டை நடத்தி செயின் பறிப்பு கொள்ளையர்களை கைது செய்த காவலர்கள்!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் மூன்று நாட்கள் முகாமிட்டு சம்பவம் நடைபெற்று 9 நாட்களுக்கு பிறகு அணைக்கட்டு புதுமலை கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி(20) என்பவனை அடையாளம் கண்டு கைது செய்தனர். கைது செய்யப்பட்டவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மற்றொரு குற்றவாளியான ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த ஜார்ஜ் லீ(26) என்பவன் கைது செய்யப்பட்டான்.

http://10.10.50.85//tamil-nadu/03-July-2021/tn-vlr-01-vellore-sp-congradulated-sit-for-better-performance-img-img-7209364_03072021222026_0307f_1625331026_766.jpg
http://10.10.50.85//tamil-nadu/03-July-2021/tn-vlr-01-vellore-sp-congradulated-sit-for-better-performance-img-img-7209364_03072021222026_0307f_1625331026_766.jpg

வேலூர்: செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க இரண்டு மாவட்டங்களில் 9 நாட்கள் தேடி இருவரை கைது செய்த வேலூர் மாவட்ட காவல்துறை தனிப்படையினரின் செயலை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சான்றிதழ் வழங்கினார்.

சத்துவாச்சாரி காவல் எள்ளைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஜூன் 06ஆம் தேதி அன்று செயின் பறிப்பு சம்பவம் ஒன்று நடைபெற்றது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிப்பதற்காக வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் எ.ஜி. பாபுவின் அறிவுறுத்தலின் பேரில், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் சம்பவம் நடைபெற்ற அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், பதிவெண் இல்லாத இருசக்கர வாகனத்தில் முகமூடி, குல்லா மற்றும் டி-ஷர்ட் அணிந்து சென்ற இருவரை அடையாளம் கண்டனர். தொடர்ந்து சத்துவாச்சாரியில் இருந்து பிள்ளையார்குப்பம், ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கு, விஷாரம், ஆற்காடு, மாசாபேட்டை, புங்கனூர், நாயக்கன்தோப்பு மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம், சாத்துமதுரை, பொன்னாத்தூர், ஊசூர் வரை மொத்தம் 90 கிலோ மீட்டர் வரை பயணம் செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

இறுதியாக, வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் மூன்று நாட்கள் முகாமிட்டு சம்பவம் நடைபெற்று 9 நாட்களுக்கு பிறகு அணைக்கட்டு புதுமலை கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி(20) என்பவனை அடையாளம் கண்டு கைது செய்தனர். கைது செய்யப்பட்டவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மற்றொரு குற்றவாளியான ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த ஜார்ஜ் லீ(26) என்பவன் கைது செய்யப்பட்டான்.

இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர்கள் மாவட்டத்தில் மொத்தம் 12 செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்த 56.5 சவரண் நகைகளை கைப்பற்றி இருவரையும் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தனிப்படையினரின் இச்செயலை பாராட்டும் விதமாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், தனிப்படையினரை நேரில் வரவழைத்து பாராட்டி, அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details