வேலூர்:திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 'புத்தகத் திருவிழா' இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதில், 80 ஆயிரத்துக்கும் அதிகமான புத்தகங்களை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
உயர்கல்வி பயிலும் மாணவர்களிடம் பல்துறை நூல்கள் வாங்கும் பழக்கத்தையும், அவற்றை வாசிக்கும் பழக்கத்தையும் ஊக்கப்படுத்தும் வகையில் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் புத்தக திருவிழா இன்று (நவ. 28) தொடங்கப்பட்டது. இதனை துணைவேந்தர் டி.ஆறுமுகம் ஏற்பாட்டில் இரு நாட்கள் நடைபெறும் இந்த புத்தக திருவிழாவில் 25-க்கும் மேற்பட்ட புத்தக பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் கலந்து கொண்டு 80 ஆயிரத்துக்கும் அதிகமான புத்தகங்களை விற்பனைக்கு வைத்துள்ளனர்.
இதில் துறை சார்ந்த புத்தகங்கள், பொது அறிவு, வரலாறு, போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் என பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த புத்தக திருவிழாவை பல்கலைக்கழக பதிவாளர் ஜெ.செந்தில் வேல்முருகன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.