வேலூர்: மதுரை மாவட்டம் கே கே நகர் பகுதியை சேர்ந்தவர் ஜோஸ்வா ஜெயக்குமார் (22). இவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று (டிச. 27) இரவு பணியை முடித்து விட்டு, தான் தனங்கியிருந்த மருத்துவமனையின் விடுதி அறைக்கு சென்ற அவர், இன்று (டிச. 28) காலை அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
காரணம் என்ன?
இதுகுறித்து, தகவலறிந்த வேலூர் வடக்கு காவல் நிலைய காவல்துறையினர், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, ஜோஸ்வா ஜெயக்குமாரின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், தங்கும் விடுதியில் எலித் தொல்லை அதிகமாக இருந்த காரணத்தினால் அதனை போக்குவதற்காக விடுதி முழுவதும் மருந்து அளிக்கப்பட்டதாகவும், இரண்டு நாட்கள் யாரும் அறையினுள் தங்க வேண்டாம் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தி இருந்த நிலையில், அதனை மீறி இவர் தங்கியதால் அந்த மருந்தின் தாக்கத்தினால் இருந்திருக்கக்கூடும் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: Jewellery robbery: கத்தி முனையில் நகை, பணம் கொள்ளை - 3 பேர் கைது