தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பஜ்ஜி கடையில் காசு தராமல் அவர்களை அடிப்பது போன்ற ஆட்களை வைத்து கட்சி நடத்தும் திமுக! -எடப்பாடி சாடல்

வேலூர்: ரவுடிகள் அதிகமுள்ள கட்சி திமுக. புரோட்டா கடையில் பிரச்சனை, அழகு நிலையத்தில் பிரச்சனை, பஜ்ஜி கடையில் காசு தராமல் அவர்களை அடிப்பது போன்ற ஆட்களை வைத்து கட்சி நடத்துவது திமுகதான். என்ற திருப்பத்தூர் தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி!

By

Published : Mar 23, 2019, 12:03 PM IST

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் திருவண்ணாமலை வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், "அதிமுக கடந்த ஆட்சிகளில் நிலமற்ற விவசாயிகளுக்கு பட்டா கொடுத்து நிலம் வழங்கியது.

ஆனால் திமுக ஆட்சியில் நிலங்களை தங்களின் வளர்ச்சிக்காக பட்டா போட்ட கட்சி. திமுக மக்களின் வளர்ச்சிக்கு உழைக்காமல் தங்களின் குடும்ப வளர்ச்சிக்கு உழைப்பது அக்கட்சியின் தொன்று தொட்ட வழக்கம்.

ரவுடிகள் அதிகமுள்ள கட்சி திமுக. புரோட்டா கடையில் பிரச்சனை, அழகு நிலையத்தில் பிரச்சனை, பஜ்ஜி கடையில் காசு தராமல் அவர்களை அடிப்பது போன்ற ஆட்களை வைத்து கட்சி நடத்துவது திமுகதான்.

நவீன மூளை படைத்த அவர்களிடம் வாக்கு சாவடிகளில் கவனமாக செயல்பட வேண்டும். பொய்யான வாக்குறுதிகளை அளித்து கொல்லைப்புறத்தில் ஆட்சி அமைக்க திமுக துடிக்கிறது. கிராமங்களின் வளர்ச்சிக்கு துளி அளவும் உழைக்காத திமுக ஆட்சி தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது" எனத் தெரிவித்தார்

ABOUT THE AUTHOR

...view details