வேலூர் மாவட்டம் ஆம்பூரில் அரசு உரிமம் பெற்ற மதுக்கடைகள் மூன்று மட்டுமே உள்ளன. ஆனால் அரசுக்கு தெரியாமல் ஆம்பூர் புறவழிச்சாலையில் தனியாருக்கு சொந்தமான குடோனில் கள்ளத்தனமாக அரசு மதுபானங்கள் இருப்பதாக அப்பகுதி மக்கள் அங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுபான குடோனை முற்றுகையிட்ட மக்கள்! - liqur godown_
வேலூர்: ஆம்பூரில் அரசுக்கு தெரியாமல் மதுபானங்கள் வைக்கப்பட்டிருந்த தனியாருக்கு சொந்தமான குடோனில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையறிந்து அங்கு வந்த காவல்துறையினர் உரிமையாளரிடம் குடோனை திறக்குமாறு கூறினர். அதனையடுத்து அங்கு பல லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனை கண்ட அப்பகுதிமக்கள் ஆம்பூரில் மூன்று இடங்களில் அரசு மதுபானக்கடை உரிமம் இருந்தும் கள்ளத்தனமாக இங்கு வைக்கப்பட்டிருப்பது எதற்கு என காவல்துறையினரிடம் கேள்வி எழுப்பினர்.
தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் மதுக்கடை இருக்க வேண்டும் என அரசு ஆணை இருக்கும்போது இதன் மிக அருகே இம்மாதிரியான கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் இருப்பது குற்றத்திற்குரிய செயல். எனவே உடனடியாக இக்குடோனின் உரிமையாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் புகார் அளித்தனர்.