தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பூவை ஜெகன்மூர்த்தி கட்சியினருக்கும் அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் - etv news

கே.வி.குப்பம் (தனி) தொகுதி அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஜெகன் மூர்த்தியின் வேட்புமனு தாக்கலின் போது புரட்சி பாரதம் மற்றும் அதிமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் சலசலப்பு நிலவியது.

அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஜெகன் மூர்த்தி
அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஜெகன் மூர்த்தி

By

Published : Mar 18, 2021, 12:33 PM IST

Updated : Mar 18, 2021, 1:14 PM IST

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியான புரட்சி பாரதம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பூவை ஜெகன் மூர்த்தி தனது வேட்புமனுவை கே.வி.குப்பம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பானுவிடம் நேற்று (மார்ச். 17) வழங்கினார்.

இந்நிலையில், அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஜெகன் மூர்த்தி தனது வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வரும் போது செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது கே.வி.குப்பம் தொகுதியின் தற்போதைய அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் லோகநாதன் அருகில் இல்லை என்பதை அறிந்து அவரை அழைத்துள்ளனர். லோகநாதனுக்கு உரிய மரியதை அளிக்கவில்லை எனக்கூறி அவரது ஆதரவாளர்களை, லோகநாதன் போகக்கூடாது எனக் கூறியதாகத் தெரிகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதனையடுத்து லோகநாதன் ஆட்களைக் கட்சியினர் சமாதானப்படுத்தியதை அடுத்து தொண்டர்கள் கலைந்து சென்றனர்.

பூவை ஜெகன்மூர்த்தி கட்சியினருக்கும் அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம்

கே.வி.குப்பம் தொகுதியை அதிமுக கூட்டணிக் கட்சியான புரட்சி பாரதத்திற்கு ஒதுக்கியதைக் கண்டித்தும். கே.வி.குப்பம் தொகுதியை அதிமுகவுக்கு ஒதுக்கக் கோரியும் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியான ஆரம்பத்திலேயே அதிமுக தொண்டர்கள் தொடர்ந்து 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உலகையை திரும்பி பார்க்க வைத்த மாற்றுத்திறனாளி பெண்!

Last Updated : Mar 18, 2021, 1:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details