வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 வெளிமாநில எல்லைகளில் மருத்துவ குழுக்களை நியமித்து பயணிகளை சோதனையிட உள்ளோம்.
'முகக்கவசம், கிருமி நாசினிகளை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை' - வேலூர் ஆட்சியர் - முகக்கவசம், கிருமி நாசினிகள் அதிக விலை
வேலூர்: கொரோனா பாதிப்பு காரணமாக முகக்கவசம், கிருமி நாசினிகளை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக 25 மருத்துவமனைகளை தேர்வு செய்துள்ளோம். இதுவரை வேலூரில் யாரும் கரோனாவால் பாதிக்கப்பட்டவில்லை. கோட்டை கோயில், அரியூர் தங்க கோயில் விழாக்களில் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என அறிவுருத்தியுள்ளோம். அதேபோல் எருதுவிடும் விழாக்கள், திருவிழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக தனியார் மருத்துவமனை, மருந்தகங்களில் முகக்கவசம், கிருமி நாசினிகளை ஆகியவற்றை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய தமிழ்நாடு-கேரளா காவல் துறையினர்!