தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாடு மேய்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. வேலூரில் நிகழ்ந்த பகீர் சம்பவம்! - பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்

காட்பாடி அருகே மாங்காய் பறித்துக் கொண்டிருந்த பெண்ணை இளைஞர் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றுள்ளார். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Etv Bharat பெண்ணூக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்
Etv Bharat பெண்ணூக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்

By

Published : Apr 8, 2023, 10:34 PM IST

Updated : Apr 9, 2023, 6:58 AM IST

வேலூர்: காட்பாடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 45 பெண் ஒருவர் ஏப்ரல் 7-ஆம் தேதி தனது மாங்காய் தோப்பில் மாடு மேய்த்துக் கொண்டு, அங்கிருந்த மாங்காய்களை பறித்துக் கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் குடிபோதையில் வந்துள்ளார். இந்த நிலையில் அவர் திடீரென அப்பெண்ணுக்கு பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றார். அப்போது, அப்பெண் இளைஞரது பிடியில் இருந்து தப்பிக்க போராடியுள்ளார்.

இதற்கிடையே அந்த இளைஞர் அங்கு கிடைத்த ஒரு கல்லை எடுத்து பெண்ணின் தலை மற்றும் தாடையில் தாக்கினார். இதனால், வலி தாங்க முடியாமல் அலறி துடித்த அப்பெண் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அவரது சத்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனே அங்கு ஓடி வந்தனர்.

அவர்கள் வருவதைப் பார்த்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தார். உடனே அங்கிருந்தவர்கள் அப்பெண்ணை மீட்டு அவசர ஊரதி மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து பனமடங்கி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து இந்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் வேலை செய்யும் கார்த்தி என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:சென்னையில் கல்லூரி மாணவிகள் குடுமி சண்டை .. வைரலாகும் வீடியோ.. நடந்தது என்ன?

Last Updated : Apr 9, 2023, 6:58 AM IST

ABOUT THE AUTHOR

...view details