ராணிப்பேட்டை: அரக்கோணத்தைச் சேர்ந்தவர் ரீட்டா (வயது 48). இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், கணவர் ராஜேந்திரன் கருத்து வேறுபாடு காரணமாக, தனியாக பிரிந்து சென்று விட்டார். அதனால் ரீட்டா அவரது சகோதரிகள் இருவருடன் சேர்ந்து ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.
ரீட்டா நாய் குட்டிகள் மீது அதீத பிரியமுடையவர். அதனால் தனது வீட்டில் பத்துக்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவர்களது வீட்டு மாடியில் இருந்த நாய் எகிறி கீழே குதிக்க முயன்றபோது, சங்கிலியில் சிக்கி இறந்து போனது. இது தொடர்பாக ரீட்டா தனது அக்கா இருவரிடமும், நீங்கள் நாய்களை சரியாக பார்த்துக் கொள்ளவில்லை. அதனால் தான் நான் பாசமாக வளர்த்த நாய் இறந்து போனது என்று சண்டை போட்டுள்ளார்.
தனது வளர்ப்பு நாய் இறந்ததைத் தொடர்ந்து கடும் மன உளைச்சலில் இருந்த ரீட்டா, இன்று திடீரென தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள், வாழை இலைகளையும், துணியையும் போர்த்தியும் அவர் மீது போட்டு, தீயை அணைத்தனர். இதனை அடுத்து அவரை மீட்டு, அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரீட்டாவின் வீட்டில் வளர்த்து வந்த 4 நாய் குட்டிகள் இறந்து போனதைத் தொடர்ந்து, பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களே நாய்க்கு விஷம் வைத்து சாகடித்து விட்டதாக போலீசில் புகார் கொடுத்துள்ளார். ரீட்டா தனது வீட்டில் வளர்த்து வரும் பத்துக்கும் மேற்பட்ட நாய்களை வீட்டுக்குள் கட்டிப்போட்டு வளர்க்கவில்லை என்றும், நாய்கள் தெருவில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் என்றும் அக்கம் பக்கத்தினர் கூறுகின்றனர்.
இதையும் படிங்க:நண்பனை பீர் பாட்டிலால் அடித்துக் கொன்ற சக நண்பர்கள் கைது : நடந்தது என்ன?