கே.வி.குப்பம் பகுதியில் சிறுவன் குடித்த மாம்பழ ஜூஸ் பாக்கெட்டில் கிடந்த இறந்த எலி: வீடியோ வெளியாகி பரபரப்பு! வேலூர்: கே.வி.குப்பம் பகுதியில் சிறுவன் வாங்கிய மாசா ஜூஸில் எலி இருந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி குடிக்கும் வகையிலும், கோடை காலங்களில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவும், இக்குளிர்பானத்தைப்பலரும் குடிக்கின்றனர்.
வேலூர் மாவட்டம், கே.வி. குப்பம் அடுத்த பி.க.புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சீனிவாசன் - நதியா தம்பதியினர். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகளும்; நான்கு வயதில் மகனும் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இதனிடையே இவரது மகனும் மகளும் அவர்களது ஹோட்டலின் எதிரே உள்ள பெட்டிக்கடையில் 10 ரூபாய் விலை உள்ள மாஸா ஜூஸை வாங்கி வந்துள்ளனர்.
இதையும் படிங்க: தென்காசியில் மீண்டும் வெறிநாய்களின் அட்டகாசம்.. பத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி.. நாய்களை மடக்கி பிடித்த நகராட்சி நிர்வாகம்..
சிறுவன் சரவணன் ஜூஸ் பாக்கெட்டை பிரித்து ஸ்டாவை வைத்து உரியத் தொடங்கியுள்ளார். அப்போது ஜூஸ் வழக்கம்போல் இல்லாமல் கசப்பு தன்மையுடன் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த சிறுவன் ஜூஸ் பாக்கெட்டை பிரித்து பார்த்துள்ளார். அதில் குட்டி எலி ஒன்று இறந்து கிடந்ததைக் கண்டு சிறுவன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது பற்றி தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஜூஸில் எலி இருந்ததை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் போட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை கண்டு மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் மாம்பழ ஜூஸில் எலி இறந்திருந்த சம்பவம் கே.வி.குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
பெரும்பான்மையான மக்களால் வாங்கி உட்கொள்ளப்படும் இந்த மாஸா ஜூஸில், எலி இருந்த சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: குடிபோதையில் தமிழக தோட்ட தொழிலாளர்களை தாக்கிய மர்ம நபர்கள்.. போலீசார் விசாரணை!