வேலூர் மாவட்டம் திருப்பத்தூரையடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அனுமன் ( 45 ). இவர் திருப்பத்தூரில் சைக்கிள் பழுது பார்க்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று இரவு அனுமன் இரவு பணி முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தபோது பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் அப்பகுதியிலிருந்த மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதனையறியாத அனுமன் சைக்கிளில் அவ்வழியாகச் சென்றபோது மின்சார கம்பி அவரது கழுத்தில் மாட்டி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி - man
வேலூர்: மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கூலி தொழிலாளி
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ஜோலார்பேட்டை காவல்துறையினருக்கு தகவலளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மின்சார கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.