தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணத்தை மீறிய உறவு - பெண்ணை கத்தியால் குத்தியவர் கைது - பெண்ணை கத்தியால் குத்தியவர் கைது

காட்பாடியில் திருமணத்தை மீறிய உறவில் இருந்த இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் பெண்ணை கத்தியால் குத்தியவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 10, 2022, 10:53 PM IST

வேலூர்: காட்பாடி அடுத்த கிளித்தான்பட்டறையில் வசித்து வருபவர் கட்டிட தொழிலாளி ராஜேஷ் (28). இவரின் மனைவி திலகா (28). திலகாவிற்கும் கணவர் ராஜேஷின் நண்பர் சந்தோஷ் (28) என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று (டிச.10) காட்பாடி காந்தி நகர் பகுதியில் சந்தோஷ், திலகா இருவரும் நடந்து சென்றுள்ளனர். அப்போது இவர்கள் இருவருக்கும் வாய் தகறாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வாக்குவாதம் முற்றியதில் சந்தோஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால் திலகாவின் தலை, காது அகிய பகுதிகளில் வெட்டியுள்ளார்.

திலகா கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் சந்தோஷை பிடித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். விருதம்பட்டு காவல் துறையினர் உடனடியாக திலகாவை மீட்டு அடுக்கும்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், சந்தோஷை கைது செய்த விருதம்பட்டு காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:திருப்பத்தூர் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் மீது தாக்குதல் - மனைவி புகார்

ABOUT THE AUTHOR

...view details