வேலூர்மாநகராட்சியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் தெருக்களுக்கு சாலை அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இதனிடையே, அப்பணிகளுக்காக சாலையோரங்களில் தோண்டப்பட்ட கால்வாய்கள் சுமார் ஒரு மாதத்துக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் உள்ளன.
இந்நிலையில், சத்துவாச்சாரியில் இருந்து கிரீன் சர்க்கில் செல்லும் சாலையோரம் உள்ள தெருவில் சாலைப்பணிகளுக்காக தோண்டப்பட்டு சேறும் சகதியுமாக உள்ள தடுப்புகளின் நடுவே இன்று அவ்வழியாக சென்ற மாடு ஒன்று சிக்கித் தவித்தது.