வேலூர்மாவட்டம், ஒடுகத்தூர் அருகிலுள்ள பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரை, ஒடுகத்தூரை அடுத்த சந்தைமேடு கிராமத்தை சேர்ந்த ஸ்வீட் கடை உரிமையாளர் ராமச்சந்திரன் மகன் சந்தோஷ்(22) என்பவர் கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதை அடுத்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஸ்வீட் கடைக்குச் சென்று சந்தோஷை கண்டித்து, அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த சந்தோஷ் தனது உறவினர்களுடன் சந்தைமேடு பகுதிக்குச் சென்று மாணவியின் வீடு புகுந்து அவர்களைத் தாக்கியுள்ளார்.