தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீடு புகுந்து ஆசிரியர் வீட்டில் 28 சவரன் நகைகள், இருசக்கர வாகனம் கொள்ளை! - வீட்டு உரிமையாளரை தாக்கிய கொள்ளையர்கள்

வேலூர்: காட்பாடி அருகே வீட்டின் உரிமையாளர்களை பயங்கர ஆயுதங்களைக் காட்டி மிரட்டி இருசக்கர வாகனம், 28 சவரன் தங்க நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

theft issue

By

Published : Nov 7, 2019, 1:11 PM IST

வேலூர் மாவட்டம் காட்பாடி சி.எம். ஜான் தெருவைச் சேர்ந்தவர் முத்து (எ) செம்பியன். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிவரும் இவர் நேற்றிரவு தனது வீட்டில் மனைவி, இரண்டு குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதிகாலையில், நான்கு பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் வீட்டின் தாழ்ப்பாளை உடைத்து பயங்கர ஆயுதங்களுடன் அவர்களை மிரட்டி ஓர் அறையில் அடைத்ததாகத் தெரிகிறது.

ஆசிரியர் வீட்டில் கொள்ளை

இதனையடுத்து, வீட்டிலிருந்து இரண்டு பீரோக்கள், அலமாரியை உடைத்து 28 சவரன் தங்க நகைகள், இரண்டு கிலோ வெள்ளிப்பொருள்கள், ரூ.35 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக்கொண்டு வீட்டின் முன்பிருந்த இருசக்கர வாகனத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், முத்து இது குறித்து காட்பாடி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும், திருடுபோன பொருள்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details