வேலூர் மாவட்டம் அணைகட்டுப் பகுதியைச் சேர்ந்த 12 பெரியவர்கள், 10 குழந்தைகள் என 22 பேர் கர்நாடக மாநிலம் அசான் மாவட்டத்தில் கரும்பு வெட்டுதல், செங்கல் சூலை உள்ளிட்ட தொழில்களில் கொத்தடிமைகளாக இருப்பதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
பெங்களூருவில் மீட்கப்பட்ட வேலூரைச் சேர்ந்த 22 கொத்தடிமைகள் - ஆட்சியர் அதிரடி!
வேலூர்: கர்நாடகாவில் கொத்தடிமைகளாக வேலூரைச் சேர்ந்த 20 பேர் இருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், வேலூர் மாவட்ட ஆட்சியர் உடனடியாக களத்திலிறங்கி அனைவரையும் பத்திரமாக மீட்டுள்ளார்.
ss
இந்தத் தகவலையடுத்து அசான் மாவட்ட ஆட்சியரின் உதவியோடு 22 கொத்தடிமைகளும் தற்போது மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் இடைதரகர் மூலம் முன்பணம் 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை பெற்றுக்கொண்டு கொத்தடிமைகளாக இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மீட்கப்பட்ட 22 பேரும் நாளை (நவ. 20) வேலூர் அழைத்துவர உள்ளனர் எனக் கூறப்படுகிறது.